நடிகர் சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் நிலையில் சூர்யாவின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் தமிழ் திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும் வெற்றிகரமாக தங்கள் திரைப்பயணத்தை நடத்தி வருகிறார்கள். சூர்யாவுக்கு பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது.
தற்போது பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் பாலாவின் இந்த கதையில் ஜோதிகாவும் நடிக்க இருக்கிறார் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.
இதற்குமுன் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.