பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தான் அமைச்சரவை கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் பதவிக்கான நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சரவைக்கு செல்லப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முடிந்தால் ஜனாதிபதி வாசுதேவ நாணயக்காரவை பதவி நீக்கம் செய்ய முடியும் என விமல் அணியினர் தெரிவித்துள்ளனர்.