ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் விரட்டியடிப்பார்கள் மக்கள் – ஸ்ரீநேசன் எச்சரிக்கை

Date:

“இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையை ஆண்ட – ஆளுகின்ற தலைவர்கள் நாட்டைச் சீர்குலைத்துள்ளார்கள். நாட்டை அவர்கள் சீர்படுத்தவில்லை.

அவர்கள் இன்னும் நாட்டைச் சீர்குலைப்பார்களானால் மக்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்; போராடுவார்கள்; நெருக்குவாரங்களைக் கொடுப்பார்கள். ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.

இதைத் தற்போதைய தலைவர்கள் உணர்ந்து சுயநலத்தைக் களைந்து பொதுநலத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...