ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை தாயகம் திரும்பியுள்ளார்.
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பசில் ராஜபக்ஷ, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று தாயகம் திரும்பியுள்ளார்.
பசில் ராஜபக்ஷவை வரவேற்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.