வடக்கில் சுகாதாரத்துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துரைத்த ஆளுநர்!

0
154

சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கொழும்பு – சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார  அமைச்சில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறைக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதாரத்துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன இந்தச் சந்திப்பின்போது உறுதியளித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபாலவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here