விமல், கம்மன்பில சென்ற பின் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0
236

அரசாங்கத்தில் இருந்த அடிப்படைவாத குழுக்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதியின் சகோதரரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின்படி இது தொடர்பில் நாம் வினவியபோது, ​​அரசாங்கத்திற்கு ஆதரவளித்த ஏனைய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் நீக்கிவிட்டு தனித்து ஆட்சி அமைக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மைத்திரி அணி உள்ளிட்ட கட்சிகளின் 30 உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் மொட்டு கட்சிக்கு 120 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் பசில் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பல அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சர்வதேச உறவுகளுக்கு அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கடும் எதிர்ப்பின் காரணமாக சில அரசாங்க வேலைத்திட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதாகவும், அந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சியில் இணையும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here