கொட்டகலை நகரில் தீ விபத்து ; இரண்டு கடைகள் எரிந்து நாசம்!

Date:

கொட்டகலை நகரில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள தளபாட வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று (05) இரவு சுமார் 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ ஏற்படும் போது வர்த்தக நிலையத்தில் எவரும் இல்லாததனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இதனால் கடைகளிலிருந்த பெறுமதிமிக்க தளபாடங்கள் உட்பட பல வர்த்தக பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு பிரதேச வாசிகள் இரானுவத்தினர்.மற்றும் திம்புல்ல பத்தனை பொலிஸார் இணைந்து பாரிய பிராயத்தனத்தினை மேற்கொண்ட போதிலும் தீ வேகமாக பரவியதன் காரணமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

தீ ஏற்பட்ட போது பிரதேச வாசிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர்.தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த தீயணைப்பு இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவித்தாக பொது மக்கள் தெரிவித்ததுடன் உரிய நேரத்திற்கு தீயணைப்பு பிரிவு வராமையே பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் பொலிஸார் இரானும் மற்றும் பொது மக்கள் இணைந்து ஏனைய வீடுகளுக்கும் கடைகளுக்கு தீ பரவுவதனை கட்டுப்படுத்தினர்.

தீ ஏற்பட்;டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.தீ ஏற்படுவதற்கான காரணத்தினையும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் திம்புல்ல பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...