திடீரென கீழே விழுந்து இறந்த மாணவி

0
204

இரத்தினபுரி கலவானை மீபாகம பாடசாலையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின் போது 13 வயது மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரேத பரிசோதனை கலவானை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

தரம் 8 இல் கல்வி கற்கும், கலவான, குக்குலேகமவில் வசிக்கும் சிறுமி, கூட்டத்தின் போது மயங்கி விழுந்து, உடனடியாக கலவானை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சிறுமியின் மூத்த சகோதரரும் சில மாதங்களுக்கு முன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here