அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல்களை நடத்துதல் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தை (பி.டி.ஏ) ரத்து செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த எதிர்ப்பு பேரணி பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
N.S