சாணக்கியன் எம்பியை அடிக்கப் பாய்ந்த மொட்டு கட்சி எம்பி!

0
58

“பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் ‘நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம்’ என்று கூறி தாக்க முற்பட்டதாக சாணக்கியன் தெரிவித்தார்.

இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இவ் நாட்டில் இல்லை. எனது சிறப்புரிமை மீறியமைக்காக பாராளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டது என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here