இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி ஜே சாங்கிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (07) இடம்பெற்றது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இது இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த வலுவான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் மதிப்பை வலியுறுத்தினார்.
குறிப்பாக இலங்கையுடன் நிலவும் சமூக பொருளாதார கலாசார உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்திய தூதுவர்அதனை மேலும் வலுப்படுத்த அவசியமா காரணிகளை ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.