எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்திஉலகின் அரைபங்கு மக்கள் சொந்தம் கொண்டாடும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
உலகின் இருப்புக்காக தீர்மானமிக்க பணிகளை முன்னெடுப்பதும், உலகின் பல் திறமைமிக்க அறிஞர்களை உருவாக்கி கற்பப்பைகளில் அவர்களை சுமந்ததும் பெண்களாகும். அத்தகைய பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம்.
இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களுக்கும் உயிரூட்டுவது தாய்பாலில் மூலம் என்பதுடன் அதன்மூலம் எல்லையற்ற ஆற்றலையும் சக்தியையும் மனிதர்களுக்கு வழங்குவது பெண்களாகும். தான் பெற்றெடுத்த உயிரை பலமிக்க மனிதனாக மாற்றுவது பெண்ணாகும்.
எனவே பெண் என்பவள் மனித இனத்தின் இருப்பை தீர்மானிப்பவளாகவும் அடுத்த தலைமுறையை உருவாக்குபவளாகவும் இருக்கிறாள்.குடும்ப அமைப்பில் பல்வேறு பணிகளை பெண் முன்னெடுப்பதுடன் பாரம்பரிய சமூக சூழலில் குடும்பத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டாலும், உலகளாவிய சமூகத்தில் அவளது வகிபங்கு பரந்த அளவில் உள்ளது.மேலும் அவள் தனது ஆதிக்கத்தை கொண்டுள்ள இல்லத்தரசி முதல் சமூகத்தின் உயர்மட்ட சொகுசு தொழிற்துறை வரை பரந்து நிற்கின்றாள்.
தற்போதைய உலக சமூகத்தை நோக்கும் போது இது மிகத் தெளிவாக தெரிகிறது.பெண் என்பவள் பெருமைமிக்க சின்னமாகும்.தொட்டில் ஆட்டும் கரம் உலகை ஆளக்கூடியது என்பதை உலகத்திற்கு நிரூபித்தது நம் நாடாகும். தற்போது பல நாடுகளில் பெண்கள் தலைவர்களாகி உள்ளனர்.
இருப்பினும் பெண்கள் வீட்டிலும், சமூகத்திலும், பணியிடத்திலும் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை உணர்ந்துக்கொள்வதுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக நிபந்தனையின்றி முன்வருவதும்,பெண்கள் எதிர்க்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் துயரங்களின் போது அவர்களுக்காக முன்நிற்பதும் முழு சமூதாயத்திற்கும் உள்ள தவிர்க்க முடியாத பாரிய பொறுப்பாகும்.
சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்