மீண்டும் பசில் ராஜபக்ஷவை வம்புக்கு இழுக்கிறார் விமல்!

0
190

தமது அர்ப்பணிப்புடன் உருவாக்கிய மக்கள் ஆணையை பசில் ராஜபக்ச தனது பாக்கெட்டில் ஏற்றிக்கொண்டதாகவும், இன்று நாட்டை ஆள்வது கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல என்றும் பசில் ராஜபக்ஷவினால் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“இது நாங்கள் முன்னின்று மக்களுக்கு பல உறுதியளித்து பெற்ற ஆணையாகும். அந்த ஆணையின் உரிமைகளில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது.

அதிலும் குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்த நாட்டின் பொருளாதாரம் எதிர் திசையில் இழுக்கப்படுமானால் அதனை சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளோம். அதற்குக் காரணம் இன்று இந்த நாட்டை ஆட்சி செய்வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல. பசில்தால் ஆள்கிறார். உண்மையில், அவர் ஒரு அமெரிக்கர். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழிக்கிறார். இந்த நாட்டை ஒரு அமெரிக்கன் கையாள்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.’

இவ்வாறு தனது பிறந்த நாளை முன்னிட்டு அனுராதபுரத்தில் நேற்று (07) இடம்பெற்ற விசேட சமய நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது விமல் வீரவங்ச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here