நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பு!

Date:

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், துறைமுக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

நேற்று 8ஆம் திகதிக்குள் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறித்த தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன.

தொழிற்சங்களினால் வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசம் நிலையில் இன்றிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதிவரை இந்த போராட்டங்கள் தொடருமென தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...