ரணிலின் கேள்விக்கு பதில் அளிக்குமா அரசாங்கம்

0
176

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

அவ்வறிக்கை எங்கே என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழும்பியுள்ளார்.

உறுதிமொழியின் பிரகாரம் அவ்வறிக்கை சபையில் இவ்வாரத்துக்குள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் நடைபெறும் அமர்வில் கலந்து கொண்ட ரணில் விக்ரமசிங்க அரச தரப்பிடம் இந்த கேள்வியினை எழுப்பியுள்ளார்.தரவுகள் மற்றும் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் என்பனவும் அவசியம், அப்போது அது பற்றி விவாதிக்கலாம்.

குறிப்பாக சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் முன்வைத்தால், அந்த மாநாட்டிலும் இது பற்றி கலந்துரையாடலாம் என குறிப்பிட்டார் ரணில். இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன, குறித்த மாநாட்டுக்கு முன்னர் அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here