நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் நிலைமை மற்றும் நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், வாகன அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற்றுத்தருமாறு ஆளுங்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.