வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல்!

Date:

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றபோது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார், ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

மேற்படி 8 பேரையும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நெடுங்கேணி பொலிஸார் நேற்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்துத் தெரிவிக்கையில்,

“வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்குத் தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது.” – என்றார்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்றபோது நீதிமன்றம் முன்பாக வேலன் சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...