Sunday, November 24, 2024

Latest Posts

கிழக்கு ஆளுநர் ஏற்பாட்டில் திருமலையில் மகளிர் தின நிகழ்வு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான சுசித்ரா எல்ல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கோவிட் காலப்பகுதியில் கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 பில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான சுசித்ரா எல்லவை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் “Worlds Most Powerful Woman” விருது வழங்கி வைக்கப்பட்டதுடன்,1880 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையக பெண் ஒருவர் தேயிலை பறிக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுசித்ரா எல்லவுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் திருகோணமலையில் கல்வி துறையில் சாதித்த பெண்கள், Rural development society, பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கலாசார நிகழ்வுகள்,சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபில நுவான் அத்துகோரல, M. S தௌஃபீக், பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் L.P மதநாயக்க, அரசாங்க அதிபர் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.