ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
உடனடியாகப் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்துக்கு உள்ளது என்று ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பி. விதானகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
எனினும், அரசுக்குக் கால அவகாசம் வழங்கி எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, குறித்த காலப்பகுதிக்குள் தங்களின் கோரிக்கைக்கு அரசு உரிய பதிலை வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
N.S