இலங்கைக்கு வந்த ‘பிரின்சஸ் குரூஸ்’ என்ற அதி சொகுசு கப்பல்

Date:

‘பிரின்சஸ் குரூஸ்’ என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (மார்ச் 11) காலை கொழும்பு துறைமுகத்தில் 2,000 பயணிகளுடன் வந்து சேர்ந்தது.

அதன்படி, 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களுடன் கப்பல் இன்று காலை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு உறுதி செய்தது.

கப்பலில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் 159 பேர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்து இன்று இரவு துபாய்க்கு புறப்படும் என அமைச்சு உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், மார்ச் முதல் வாரத்திற்குள் கிட்டத்தட்ட 25,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 234,547 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 01 முதல் 06 வரை இலங்கையில் மொத்தம் 24,363 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் ரஷ்ய பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...