பதுளையிலும் மகளிர் தின நிகழ்வு நடத்திய இதொகா

0
206

பதுளை மாவட்டத்தின் மகளிர் தின நிகழ்வுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் அசோக்குமாரின் ஏற்பாட்டில் ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிரேஷ்ட ஆலோசகர் T.V சென்னன், பிரதி தவிசாளர் இராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட மகளிரணித் தலைவிகள் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் பெண் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட மகளிரணித் தலைவிகள், தோட்ட தலைவிகள் பெண் பிரதிகள் உட்பட 500ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here