அரசாங்கம் தலையிட்டு இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்க கூடும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சந்தையில் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவைத் தொடர்ந்து பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தானும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தத் தடையை இம்மாத இறுதிக்குள் இந்தியா மறுபரிசீலனை செய்யப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.