சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இன்று மாலை 4.30 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க பொது மாநாட்டின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் தெரிவித்தார்.
“.. நேற்று நண்பகல் 12 மணியளவில், நாட்டில் உள்ள அனைத்து 17 தேசிய பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணியில் இருந்து விலகி இருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த ஜனவரி மாதம் 22ஆ ம் திகதி நடந்த விவாதத்தில், பல்கலைக் கழகங்களில் நிலவும் சம்பள வெட்டு சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அது இன்னும் சரி செய்யப்படவில்லை. எனவே வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதற்கு அதிகாரிகள் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்றார்.