ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை லீ குவான் யூ போலவும், மகிந்த ராஜபக்சவை மகாதீர் மொஹமட் போலவும் விமல் வீரவன்ச விழித்திருந்தார்.
அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பான தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது.
வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வீரவன்சவிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வீரவன்ச, லீ குவான் யூ இறந்துவிட்டதாக கூறியுள்ளார். மகாதீர் முகமட் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், மக்கள் எதிர்பார்த்த லீ குவான் யூ மற்றும் மகாதீர் முகமட் ஆகியோரின் செயலற்ற தன்மையே அரசாங்கத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணம் என்றும் வீரவன்ச மேலும் குறிப்பிடுகிறார்.
அப்போது தான் அந்த கருத்தை வெளியிட்டதாகவும், அந்த கருத்தை மெய்பட செய்ய உண்மையாக்க அரசாங்கத்துக்குள் கடுமையாக போராடியதாகவும் சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ச, அந்த போராட்டத்தின் விளைவாகவே அரசாங்கத்தில் இருந்து விலக நேரிட்டதாக அவர் கூறுகிறார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலற்ற தன்மையே தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பாரிய பிரச்சினை எனவும், இதனால் மக்கள் எதிர்பார்க்காதவர்கள் அரசாங்கத்திற்குள் புகுந்து நாட்டை தேவைக்கேற்ப இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கொண்டு செல்வதாகவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.