Monday, January 20, 2025

Latest Posts

போதைப்பொருள் வியாபாரிவாளால் வெட்டிப் படுகொலை – கம்பஹாவில் பயங்கரம்

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பயங்கர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் நேற்று (13) பகல் இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டுக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹயஸ் வாகனத்தில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறைக் கும்பல், மேற்படி நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது.  

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், கொலைச் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.