கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெறுவதற்கும் அவற்றை ஏலம் விடுவதற்கும் நிதி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கிய பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் வர்த்தமானி அறிவித்தல் நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் பணிப்புரையின்படி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் மூலம், வரும் டிசம்பர் 15ம் திகதி வரை சொத்து கையகப்படுத்தல் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.