பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன, முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக அவரது முன்னாள் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய சுகீஸ்வர, அண்மையில் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பி வைத்த பிரதான சூழ்ச்சிதாரி, அப்போதைய ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர என ற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எவரும் சந்திக்க விடாது ஜெனரல் எகடவெல முடக்கினார்.
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் சாவேந்திர சில்வா ஆகியோரும் சதியில் இணைந்து கொண்டிருந்தனர் எனவும் அவர்களும் நாடகமாடியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோட்டாபயவின் மிரிஹான வீட்டை சுமார் 150 முதல் 180 பேர் வரையில் முற்றுகையிட்டனர்.
முஸ்லிம் சமூகத்தினர் கோட்டாபயவை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.