பசில் ராஜபக்ஷவை வீட்டுக்குச் செல்லுமாறு பிரபல தேரர் பகிரங்க கோரக்கை

Date:

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் இருந்ததும் இல்லாமல் போய்விட்டதாகவும் அரசாங்கத்தை உருவாக்கிய அனைவருக்கும் பொது மக்கள் இடிவிழக் கோருவதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமய விகாராதிபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

“இன்று மக்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த அரசாங்கத்தை கொண்டு வர உதவியவர்களுக்கு இடிவிழட்டும் , அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு இடி விழட்டும் என்கின்றனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து ஆட்சியை முன்னெடுப்பதற்கு குறைபாடுகளை காட்டி வருகிறோம். ஆனால் தற்போது அந்த வரம்பு மீறப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இருந்தவை காணாமல் போய்விட்டதாக பலர் கூறுகின்றனர். பசில் அவர்களே, இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட முடிந்தால், குறைந்தது ஆறு மாதங்களாவது விலகி இருங்கள். இன்று மக்கள் உங்களை மிகப்பெரிய தீயவர் என்று கூறுகிறார்கள்.”

கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...