தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

Date:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

பின்னர் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு உரிமையாளரான சேசுராஜா, அண்ணாமலை, கல்யாணராமன், செய்யது இப்ராகிம், முனீஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 8 மீனவர்களும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களை வருகிற 3-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரோக்கியா டேனியல் என்பவரின் படகில் இருந்த மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...