நாட்டின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கிகள் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 275 ரூபாயாக பதிவாகி உள்ளது.
மக்கள் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 264.33 ரூபாயாகவும் விற்பனை விலை 274.99 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
இலங்கை வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 265 ரூபாயாகவும் விற்பனை விலை 275 ரூபாயாகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 265.00 மற்றும் விற்பனை விலை 275.00 ஆகும்.
சம்பத் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 265 ஆகவும் விற்பனை விலை 275 ஆகவும் உள்ளது.