லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
சமையல் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான எரிவாயு சரக்குகளை இன்னும் பெறாத காரணத்தினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
இந் நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இதுவரை சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானதோடு அரசாங்கத்திற்கு எதிராக தமது அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர்.