மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், விலை உயர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவும் அது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இ.போ.ச.வுக்கு வருடாந்தம் 25 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதுடன் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு என்பனவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கடந்த 09 வருடங்களில் விலையை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது .
இதேவேளை, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மின்சாரத்தைப் பயன்படுத்தி நீரை இறைக்க வேண்டியிருப்பதால் நீர் விநியோகச் செலவும் அதிகரிக்கும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது