டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு

0
209

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (19) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379 ரூபாய் 41 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394 ரூபாய் 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 299.35 ரூபாயிலிருந்து 298.36 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 309.48 ரூபாயிலிருந்து 308.47 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.67 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 300 ரூபாயிலிருந்து 299.50 ரூபாய் மற்றும் 309 ரூபாயிலிருந்து 308.50 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here