யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ். பல்கலைக்கழகம் மூன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசும் இதுவரை தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.