இதுவரை 7 உறுப்பினர்கள் கோப் குழுவில் இருந்து விலகல்

0
174

உத்தர லங்கா கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, பொது வர்த்தகக் குழுவில் (கோப் குழு) இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

அந்த குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இது அமைந்திருந்தது.

முன்னதாக கோப் குழு உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, சரித ஹேரத், தயாசிறி ஜயசேகர எஸ். எம். மரிக்கார், ஹேஷா விதானகே மற்றும் ராசமாணிக்கம் சானக்கியன் ஆகியோரும் ராஜினாமா செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here