தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

0
135

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மனிதாபிமான மக்கள் கூட்டணி எனும் பெயரில் இந்தப் புதியக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

சுமார் நாற்பது சிவில் அமைப்புகள் இந்தப் புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக புதிய கூட்டணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் புதிய கூட்டணியுடனான ஒப்பந்தங்களும் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவராக தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here