இலங்கை வங்குரோத்தான நாடல்ல ; ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்று (21) விடுத்துள்ள விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை, அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இரு தலைவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் இந்த உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், அது தொடர்பான உடன்படிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...