2023 பிப்ரவரி மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு (NCPI) 53.6% ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தின் மூலம் அளவிடப்படுகிறது என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை (DCS) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 ஜனவரியில் பதிவான 53.2% என்ற தலையீட்டு பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகமாகும்.
அதன்படி, உணவுப் பிரிவு மற்றும் உணவு அல்லாத குழுவிலிருந்து பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்திற்கான பங்களிப்புகள் முறையே 22.1% மற்றும் 31.5% ஆக இருந்தது.
ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2023 வரை உணவு விலைகள் 53.6% இலிருந்து 49.0% ஆக குறைந்துள்ளது, அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 52.9% இலிருந்து 57.4% ஆக அதிகரித்துள்ளது.
N.S