சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரக்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.