ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை!

Date:

பிளாஸ்டிக் மாசுபாடு முக்கிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை இலங்கையில் தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கும் முடிவுடன், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கப், ஸ்பூன், தட்டுகள், பிளாஸ்டிக் முட்கரண்டி, மற்றும் மாலைகளுக்கு தடை விதிக்கப்படும்.

நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் இருப்பதால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை அமைச்சு கட்டுப்படுத்தும் என்றும் கூறினார்.

பிளாஸ்டிக் தட்டுகளை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் பொருட்களை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சு எதிர்பார்கிறது.

மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி இத்தொழிலை தொடங்க காத்திருப்போரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும். மக்கள் வீட்டில் பிளாஸ்டிக் ஸ்பூன், தட்டு, முட்கரண்டிகளை பயன்படுத்துவதில்லை. ஆனால் மக்கள் வெளியில் அவற்றைப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழலில் வீசவும் செய்கின்றனர்.

சந்தை தேவை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மற்ற நாடுகளில் இருந்து சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை அமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அமைச்சு முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாக டாக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு தோல்வியை அடுத்து சஜித் அணிக்குள் மோதல் வெடிப்பு

கொழும்பு மாநகர சபையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சமகி ஜன பலவேகய கட்சிக்குள்...

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர்...

NPP – ACMC இணைவு

குருநாகல் மாநகர சபையில் நேற்று (17) தேசிய மக்கள் சக்தி கட்சி...

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி...