2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தரம் ஆறில் மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை https://g6application.moe.gov.lk/#/ மூலம் சரிபார்க்கலாம்.
ஆண்கள் பாடசாலைகளுக்கு, கொழும்பு றோயல் கல்லூரியில் தரம் ஆறில் சேர்வதற்கு 182 மதிப்பெண்கள் வெட்டுப்புள்ளிகள் வேண்டும். கண்டியில் உள்ள தர்மராஜா கல்லூரி மற்றும் கிங்ஸ்வுட் கல்லூரியில் சேருவதற்கு முறையே 180 மற்றும் 177 புள்ளிகள் தேவை. கொழும்பு ஆனந்த வித்தியாலயத்திற்கு 179 வெட்டுப்புள்ளிகள் தேவை.
கொழும்பு விசாகா வித்தியாலயம் போன்ற பெண்கள் பாடசாலைகளுக்கு தரம் 6 இல் நுழைவதற்கு 181 வெட்டுப்புள்ளிகள் இருக்க வேண்டும். தேவி பாலிகா பாலிகா வித்தியாலயத்திற்கு 178 புள்ளிகளும், மலியதேவ பாலிகா வித்தியாலயத்திற்கு 177 புள்ளிகளும், மகாமாயா வித்தியாலயம், கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் கண்டி புஷ்பதன வித்தியாலயத்திற்கு 176, 171, மற்றும் 166 வெட்டுப்புள்ளிகள் தேவை.
வெட்டுப்புள்ளிகள் தொடர்பான முறையீடுகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவற்றை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
N.S