நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் பசில் ஜனாதிபதியை சந்தித்த போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த பிரேரணையை பின்பற்றாவிடின், ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், அது நாட்டுக்கு நல்லதல்ல என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு நாட்டில் நியாயமான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.