மலையக மக்கள் தொடர்பில் IMF குழுவிடம் வேலுகுமார் எம்பி முன்வைத்த கோரிக்கை

Date:

IMF முன்மொழிவுகளில், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென, விசேட வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் IMF பிரதிநிதிகளிடம் முன்வைத்தார்.

இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை, பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடல் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைப்பெற்றது. அதன் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலின் போது, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, உற்பத்தி செலவீன அதிகரிப்பால் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை இழக்க நேரிடும் அபாயம், வரி முறையிலே காணப்படும் ஒவ்வாமை, மற்றும் சிறிய, நடுத்தர கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புக்கள் பற்றி IMF பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

அதன் போது, சமூக நல பிரச்சினைகளின் அதிகரிப்பும் பேசப்பட்டது. இக் கலந்துரையாடலின் போது, பொருளாதார நெருக்கடியினால் பெருமளவு பாதிப்பை சந்தித்திருப்பது பெருந்தோட்ட தொழிலாளர்களே என்பதையும், அவர்களின் வறுமை நிலை 60 வீதத்தை விட அதிகரித்து விட்டது என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் சுட்டிக்காட்டினார்.

IMF முன்மொழிவுகளில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்கள் தொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன? என மேலும் வினவினார்.

அதற்க்கு IMF பிரதிநிதிகள், “நாம் முழு தேசத்தையும் அடிப்படையாக கொண்ட நலன்புரி திட்டத்தையே கவனத்தில் கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டனர்.

“அஸ்வெசும அதில் முக்கியமானதொன்று” என்பதையும் சுட்டிக்காட்டினார். அதன் போது, “நாட்டிலுள்ள ஏனைய பிரிவினரை விட மிக மோசமான பாதிப்பை எதிர்நோக்குவது பெருந்தோட்ட தொழிலாளர்களே. அஸ்வெசும கொடுப்பனவு கூட அவர்களுக்கு ஒழுங்கான முறையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அதன் தெரிவிலும் மிகுந்த பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென தனித்த விசேட திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்” என்ற வேண்டுகோளை வேலு குமார் முன்வைத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...