இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இலங்கைக்கு வந்தது!

0
191

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இன்று (மார்ச் 23) அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முதலில் பிப்ரவரி பிற்பகுதியில் வரவிருந்த இறக்குமதியில், பல முறை தாமதமாகி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொத்தம் 2 மில்லியன் முட்டைகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

சுகாதார அமைச்சினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேவையான பரிசோதனைகளைத் தொடர்ந்து முட்டைகள் பகிர்ந்தளிக்கப்படும்.

அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்தவும், உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கவும் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பொது உபயோகத்திற்காக கடைகளில் விற்கப்படாது, இந்த முட்டைகள் ரூ.40 விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேக்கரித் தொழிலில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான தொடர் வழிகாட்டல்களை விரைவாக தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here