கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்மொழிவு தொடர்பாக மேலும் விவாதங்கள் நடந்து வருவதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மருதானை மற்றும் சுதுவெல்ல பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பு மாநகர சபையில் நீண்ட காலமாக பணியாற்றிய கித்சிறி ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்புத் தொகுதியின் அமைப்பாளராகவும் உள்ளார்.
அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் விசுவாசமானவராகவும் கருதப்படுகிறார்.