டெலிபோன் கொழும்பு மேயர் வேட்பாளர் ருவைஸ் ஹனிபா

0
69

கொழும்பு மாநகரசபைக்கான தமது கட்சியின் மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை ஐக்கிய மக்கள் சக்தி பெயரிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டார்.

‘ ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் கொழும்பு மேயர் வேட்பாளராக வைத்திய கலாநிதி ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம். தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், திறமையானவரும், தைரியம் வாய்ந்தவரும் என சகல குணங்களும் நிறைந்த முற்போக்கு ஆளுமையாக திகழ்ந்து வருகிறார்.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் அறிவித்தார்.

ஒரு மருத்துவராக, இலவச சுகாதாரத் துறைக்கு நிபுணராக தொழில்முறை முன்னேற்றத்திற்காக சேவையாற்றியதைப் போலவே, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளில் இலட்சக்கணக்கான நோயாளர்களு அவர் சிகிச்சையளித்துள்ளார்.

அவர் தற்போது களனி மற்றும் கொழும்பு மருத்துவ பீடங்களில் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதற்காக கற்பித்து வருகிறார்.
மேலும் அவர் குடும்ப நல சுகாதாரம் தொடர்பான பரப்பில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

காழும்பு பல்கலைக்கழகத்தில் குடும்ப நல சுகாதார கற்கையை ஆரம்பித்த ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here