இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1500 அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கொள்கலன்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு நிதியமைச்சும் வர்த்தக அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கோதுமை மா, சீனி மற்றும் அரிசி என்பன கையிருப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.