நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களிலும் இந்த வரிசைகள் தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த உத்தரவு உள்ளதென ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பெறப்படும் கடனில் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறிய போதிலும், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என அதன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிலையங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததன் மூலம் எரிபொருள் வரிசைகளை நிறுத்த முடியாதென்பதனை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய நிலைமையில் முடியாதமையினாலேயே இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்.
4 உயிர்கள் பறிபோன பிறகு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நால்வரில் ஒரு சிலர் ஒரு கோப்பை நீரேனும் அருந்தாமல் வந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.