அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Date:

சதொச விற்பனை நிலையங்களில் இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 210 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 298 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 270 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 119 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் டின் மீனின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 520 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 555 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 1,100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 450 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 380 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...