முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, மைத்திரிபால சிறிசேன கடந்த காலத்தில் பொறுப்பான அமைச்சு பதவிகளை வகித்தவர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மிக முக்கியமான தகவலை குற்றப்புலனாய்வு பிரிவிடமிருந்து மறைத்துள்ளார். தண்டனை சட்டக்கோவையிலுள்ள பொய் சாட்சியங்கள் என்ற 189 ஆவது உறுப்புரைக்கமைய மைத்திரிபால குற்றமிழைத்துள்ளார்.
மேலும், தண்டனைச் சட்டக்கோவை 179 ஆவது உறுப்புரைமையிலிருந்து குறிப்பிட்டுள்ளதை போன்று அவர் இரகசிய தகவல்களை மறைத்து வைத்துள்ளார். இதுவும் குற்றச்செயலாகும் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால அரசியல் பலமிக்கவராக இருந்தாலும் நீதிக்கு முன் அனைவரும் சமமே. எனவே மைத்திரிபால சிறிசேனவை தயவு செய்து கைதுசெய்யுமாறு வலியுறுத்துகின்றோம்” இவ்வாறு வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.